Objects in the mirror are closer than they appear.

இது கடந்த 2006 ஜூன் மாதம் எழுதிய குறும்பட திரைக்கதை. இப்போதைக்கு சில திருத்தங்களுடன். என்ன தான் இருந்தாலும் பழைய கள்ளுக்கு ருசி அதிகம் தானே  😉

திரை விலக…

காட்சி 1: [அதிகாலை ]

வயதான தாத்தா ஒரு வாலிபனை வரவேற்று அமர கையசைக்கிறார். [மின்விசிறி மெல்ல சுழலத் தொடங்க, அதன் வழியே..]

[ஒரு இழவு பத்திரிக்கையை டேபிளில் வைக்கிறான்.]
தாத்தா..”

நான் போகறதுக்குள்ள என் புள்ளையாண்டான் முந்தின்னுட்டன்

[அழுதுகொண்டே] “உங்ககிட்ட பகைச்சுக்கிட்டு அப்பா ஜாதி விட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு மதராஸ்ல நல்லபடியா வாழ்ந்தார். ஆனா விதி, ரெண்டு பேரும் விபத்துல போய்ட்டா.”

ப்ராப்த்தம், குத்தம்

“Nonsense! [காபி குடிக்கிறான்] அதெல்லாம் ஒண்ணுமில்ல, நான் இதோ சந்தோஷமா இருக்கேனே, அமெரிக்கவில படிச்சிட்டு..

இந்த கிழவனை பத்தி தான் யாருக்குமே அக்கறையில்ல

அப்படி ஒன்னுமில்ல, உங்களை பாக்கதோ வந்துட்டேனே, (நிமிர்ந்து) ஆனா வீடுதான் ரொம்ப பழசா..”

உள்ளே போய் பாரு

[விரல்காட்டிய திசை நுழைய, வீடு முழுதும் அரதப்பழசாய் சிலந்திவலைகளோடு இருக்க அழகிய அறை ஒன்று விரிகிறது. தாத்தா நிமிர்ந்து சிரிக்க,பேரனோ வாயில் விரல் வைக்கிறான்]
[மறைந்து மறைந்து (Flash) காட்சி தெரிகிறது : நவீன சாதனங்கள்: டி.வி, டி.வி.டி, .சி, ஹோம் தியேட்டர், வளிகம்பிகளோடு ஜன்னல்,.. ]

“Wow! ரொம்ப அட்வான்ஸ்ட்!” [சாய்ந்து படுக்கிறான்]

ஆப் கோர்ஸ்” [உடைந்த ஆங்கிலத்தில்]

பாத்ரூம் எங்கே?” [நுழைய காட்சி இருள்கிறது]

காட்சி 2: [மதியம்]

[இருளிலிருந்து ஒளி பரவ நுழைந்த அறையினின்று பேரன் வெளியே வருகிறான்]

நீ வா. நாம கிராமத்தை சுத்தி பார்க்கலாம்

[எல்லா இடங்களுக்கும் சுற்றிக்காட்டும் காட்சிகள் மௌனத்தில் நகர்கின்றன]

“Did you know? நான் சைக்காலஜி கோல்டு மெடல்!

இது பத்தாவது முறை காலையிலருந்து

மனுஷாளை பர்த்த மாத்திரத்திலேயே எடை போட்டுடுவியா?”

ம்ம்ம், Yeah!”

என்னை?”

“Maybe I should just try: Conservative. முன்கோபம்.பிடிச்சது இட்லி, இடது கையில வாட்ச் கட்டுற எம்.ஜி.ஆர் விசுவாசி. கடவுள் பக்தி ஜாஸ்தி. பட்டறிவு நிறைய. அப்புறம் ரெண்டு கண், ஒரு மூக்கு, ஒரு வாய்..”

போக்கிரி!”

[வந்த பாதையில் அதே போல சிரித்துக்கொண்டே
போகிறார்கள்]

காட்சி 3: [இரவு]

[சாப்பிட அமர்கிறார்கள்]
என்னதான் சொல்லு பேராண்டி, Old is gold!” (உடைந்த ஆங்கிலத்தில்)

“No way!”

அந்த காலத்திலே பூகம்பம் பிரச்சனை எல்லாம் வந்ததில்லை. சுனாமி, அரசியல் பூசல், அசிங்கம்அசிங்கம், பொம்பளை விவகாரம், ஊழல்..”

அதெல்லாம் எப்போத்திலிருந்தோ இருக்கு .தகவல் தொடர்பு இல்ல, So தெரியல!”

குட் நைட்.

“Same to you தாத்தா !”

எவ்வளவு முயன்றும் பேரனுக்கு பழைய துடைப்பம் தான் ரொம்ப நன்றாக பெருக்கும் என புரியவைக்க முடியாமல் படுக்க ஊஞ்சலுக்கு செல்கிறார் தாத்தா, தொங்கிய முகத்தோடு. பேரன் தன் டிஜிட்டல் அறைக்கு.

என்ன தாத்தா Liquidator கட்டிலிலிருந்து இவ்வளவு தூரத்தில இருக்கு? ப்ராணம் போய்டும்.
கண்ணாடியை பாரு.”
எதுக்கு Objects in the mirror are closer than they appear-ன்னு எழுதியிருக்கு? அதை வேற எஙயோன்னா எழுதுவா?

காலையில புரியும்,படு

காட்சி 4:  [காலை]

[மறுநாள்]

[பிணமாக பேரனை இழுத்துச்சென்றார்கள். Autopsy ரிப்போர்ட்டில் பாய்ஸனிங் என்றிருந்தது]

[தாத்தா படுக்கையை விட்டு எந்திரிக்கவேயில்லை.எல்லா சம்பிரதாயங்களும் பாதி ஸ்கிரீனில் நடக்கிறது. ஒருதுளி கண்ணீர் தாத்தா கண்களிலிருந்து. மெல்ல கூட்டம் விலகியவுடன் ஒரு கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு,பேரனின் அறைக்குள் நுழைந்தார்]

கருப்பு வெள்ளையில்…
பேரன் வருவதற்கு முந்தைய நாள் காலண்டர் காற்றில் பறக்க,
தாத்தா எலி பாஷனத்தை வடிவமைத்த அறைக்குள் நுழைக்கிறார்.

தாத்தாவும் பேரன் பார்த்த கண்ணடியில், அதே தோரணையில்முகம் பார்க்கபேரனின் சொற்கள் பின்னே எதிரொலிக்கின்றன. பேரனினின் பாவனையிலேயெ உறங்கிப்போகபேரன் கொண்டுவந்த பத்திரிக்கை திரையில் தோன்றுகிறது.

‘You can’t teach an old dog new tricks’ எழுத்துக்களை பார்த்து பலர் கைகொட்டி சிரிக்க திரை மெல்ல மூடுகிறது.

Advertisements

About this entry